இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் தற்போது, ‘பத்மாவதி’ என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித் கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கார்னிசேனா என்ற அமைப்பை சேர்ந்த சிலர் இப்படத்தின் படப்பிடிப்பில் புகுந்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட படக்குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளை அவர்கள் சேதப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து கூறும்போது, சஞ்சய் லீலா பன்சாலி, 1300-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணியான பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருவதாகவும், இந்து மதத்தை சேர்ந்த அவர் முஸ்லீம் மன்னர் ஒருவரை மணந்துகொண்டதாகவும் அதையே பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரபல பாலிவுட் டைரக்டர்கள் ராம்கோபால் வர்மா, மகேஷ்பட், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
சம்பவத்தின்போது தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகிய மூன்று பேரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. தாக்குதல் சம்பவம் பற்றி இவர்கள் மூன்று பேரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று பேரும் மவுனமாக இருப்பது ஏன்? என்று படக்குழுவை சேர்ந்த சிலர் கேள்வி விடுத்து இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment