சூர்யா நடிப்பில் தற்போது ‘சி-3’ படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில் படம் தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான தேதியை படக்குழு பலமுறை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் படத்தை வெளியிட படக்குழு தயங்கி வந்தது. மேலும் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி 3-ம் தேதிக்கு மீண்டும் தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது பிப்ரவரி 9-ம் தேதி படம் வெளியாகும் என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
சூர்யாவின் `சி-3′ படம் தள்ளிப்போனதால், லக்ஷமன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்சாமி நடித்துள்ள `போகன்’ படத்தை பிப்ரவரி 2-ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னதாக `போகன்’ பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் -பிரணிதா நடித்துள்ள ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படமும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment