Monday, January 30, 2017

ஜல்லிக்கட்டு காளைக்கு பயந்து தள்ளிப் போகும் சிங்கம்-3 ?

jallikattu singamசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சி3 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சற்றுமுன் பிப்ரவரி 9 மற்றும் 10ஆம் தேதிகளில் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜல்லிக்கட்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


எனவே அன்றைய தினம் அனைத்து டிவிக்களும் ஜல்லிக்கட்டை நேரலையில் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளனர்.


இதனால் அன்றைய தினத்தில் வெளியாகவுள்ள சி3 படத்தின் வசூலுக்கு பாதிப்பு வரக்கூடும் என கூறப்படுகிறது.


இதனால் ஜல்லிக்கட்டு காளைக்கு பயந்து சிங்கம் 3 பின்வாங்குமா? அதாவது ரிலீஸ் தள்ளிப் போகுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


ஒருவேளை காளையை எதிர்த்து சிங்கம் நின்றாலும் ஆச்சரியமில்லைதான்.


Whether Si3 may postpone due to jallikattu live shows

0 comments:

Post a Comment