
இந்நிலையில், பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தி என்பவரை சாத்னா டைட்டஸ் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தது. இதையடுத்து, சாத்னாவின் தாயார் தனது மகளை ஏமாற்றி, ஆசை வார்த்தைகள் கூறி கார்த்தி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக போலீசில் புகார் கொடுத்தார்.
ஆனால், போலீசார் விசாரணையில் கார்த்திக்கை தான் மனப்பூர்வமாக காதலித்துதான் திருமணம் செய்துகொண்டதாக சாத்னா கூறினார். மேலும், இருவீட்டார் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், இருவீட்டார் தரப்பிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி, வருகிற பிப்ரவரி 6-ந் தேதி இவர்களது திருமணம் சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கார்த்திக்-சாத்னா டைட்டஸ் ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10-ந் தேதி சென்னை வடபழனியில் அமைந்துள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெறும் திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment