Thursday, October 27, 2016

விஜய் டி.வி.யில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் : தீபாவளி ஸ்பெஷல்


விஜய் டி.வி.யில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் : தீபாவளி ஸ்பெஷல்



27 அக்,2016 - 11:32 IST






எழுத்தின் அளவு:








விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி நடித்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன். எழில் இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால் தயாரித்தார். புஷ்பா புருஷன் சூரி காமெடிக்காக கொண்டாடப்பட்ட படம். வெளிவந்து 3 மாதத்திற்குள் சின்னத்திரைக்கு வருகிறது. தீபாவளி அன்று பகல் 12 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. மாலை 4 மணிக்கு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை ஒளிப்பரப்பாகிறது. கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடித்த படம்.

இதுதவிர காப்பி வித் டிடியில் மனம் திறக்கிறார் சிம்பு. அரவிந்த்சாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் காஜல் அகர்வால் சிறப்பு விருந்தினர். 200 மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு நீயா நானா, கலக்க போவது யாரு சிறப்பு நிகழ்ச்சியில் கொடி படத்தின் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். சுகிசிவத்தை நடுவராக கொண்ட சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.


0 comments:

Post a Comment