பைரவா படத்தில் கருவாட்டு குமாராக நடித்துள்ள மைம் கோபி!
26 அக்,2016 - 09:24 IST
கபாலி ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் பெருமாள் என்ற முக்கிய வேடத்தில் நடித்தவர் மைம் கோபி. அதையடுத்து கயல், மாரி, மாயா, கதகளி, கபாலி என பல படங்களில் நடித்தவர், தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துள்ளார். கபாலி படத்தைப்போலவே இந்த படமும் எனக்கு முக்கியமான படம். ரசிகர்கள் மத்தியில் என்னை பேச வைக்கும் வேடம் என்கிறார் மைம்கோபி.
பைரவா படத்தில் தனது கேரக்டர் பற்றி அவர் கூறுகையில், கபாலி படத்தில் ரஜினி சாருடன் நடித்தது பெருமையான விசயம். அந்த படத்தில் நடித்தபோது எனது நடிப்பைப்பார்த்து என்னை அவர் பாராட்டினார். அந்த பாராட்டை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல் விஜய்யுடன் பைரவா படத்தில் நடித் தபோதும் அவர் என்னை பாராட்டினார். இப்படி மிகப்பெரிய நடிகர்கள் பாராட்டும்போது பெரிய உற்சாகமாக இருக்கிறது. இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை கொடுக்கிறது.
மேலும், பைரவா படத்தில் ஜெகதிபாபு, டேனியேல் பாலாஜியுடன் இணைந்து நானும் ஒரு வில்லனாக நடிக்கிறேன். கதைப்படி, வடசென்னை வில்லனாக நடித்துள்ள எனது பெயர் கருவாட்டு குமார். வடசென்னை ஸ்லாங்கில் பேசி நடித் திருக்கிறேன். சிட்டியில் உள்ள விஜய்யுடன மோதும் வில்லன் நான்தான். விஜய் சார் படம் பெரிய ரீச்சைக்கொடுக்கும் என்பதால் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறேன். ஆனால் இந்த வேடத்தில் என்னை ரசிகர்கள் கடுமையாக திட்டுவார்கள். அந்த அளவுக்கு பயங்கரமான வில்லன் வேடம்.
ஆனபோதும், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை மனதில் கொண்டு எனது பர்பாமென்ஸை விஜய் சார் பாராட்டினார். அதனால் என்னதான் ரசிகர்கள் என்னை திட்டினாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. மேலும், அவர்கள் என்னை திட்டினால் அதை அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்வேன் என்று கூறும் மைம் கோபி, இதுதவிர கட்டப்பாவை காணோம், திருட்டு கல்யாணம், நெடுநல்வாடை, பப்பரபாம், மோ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment