மீண்டும் நாயகனாகும் ஆதி
28 அக்,2016 - 13:19 IST
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஆதி அல்லு அர்ஜூனின் சரைய்னோடு படத்தில் வில்லதனம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். சரைய்னோடு படத்தில் வில்லனாக நடித்த ஆதிக்கு பாராட்டுகள் குவிந்ததுடன் அடுத்த வில்லன் வேடத்திற்கே வாய்ப்புகளும் குவிந்தன. இதனால் கவலையில் இருந்த ஆதிக்கு டோலிவுட் பெண் இயக்குனர், சசிகிரண் நாராயணா, நம்பிக்கை கொடுத்துள்ளார். மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் நாராயணின் மகளான சசிகிரண் நாராயணா, சஹெபா சுப்ரமணியம் படத்தை இயக்கினார் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவிய அத்திரைப்படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் சசிகிரண் உருவாக்கியுள்ள கதையை இயக்குனர் ஆதியிடம் கூறியுள்ளார். விசாகபட்டிணத்தை பின்புலமாக கொண்ட இப்படத்தின் கதை ஆதிக்கு பிடித்துப் போக, ஆதியும் இப்படத்தில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஆதிக்கு நாயகி தேடும் வேலையில் சசிகிரண் தற்போது ஈடுபட்டு வருகின்றாராம்.
0 comments:
Post a Comment