தீபாவளி விருந்தாக நேற்று கார்த்தி நடித்த காஷ்மோரா படம் வெளியானது.
கோகுல் இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பெரும்பாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்களே இப்படத்திற்கு வந்துள்ளன.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த கார்த்தியின் அண்ணன் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
“பருத்திவீரன் பார்த்து, கார்த்தியை கட்டிபிடித்து பாராட்டினேன்.
ஆனால் இன்று காஷ்மோராவை பார்த்ததும், சில அடிகள் தள்ளி நிற்கிறேன்.
தம்பி டேய் கலக்கீட்ட. இப்படி நான் எதிர்பார்க்கலை.
நீ என்னை முழுவதும் ஆச்சர்யமடைய வைத்துவிட்டாய்.
கோகுல் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்கள்.” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment