ஏப்ரலில் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் கரீனா கபூர்
28 அக்,2016 - 11:51 IST
பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். ஐஸ்வர்யா ராய் போன்று இவரும் திருமணம் ஆன பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது கரீனா கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிக்காமல் உள்ளார். டிசம்பர் மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கரீனா நடிப்பை தொடர இருக்கிறார்.
இவர் அடுத்தப்படியாக ‛வீரே தி ஷாதி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சஷாங் கோஷ் இயக்குகிறார். ரேகா கபூர் தயாரிக்கிறார். கரீனாவுடன் சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் ஆகியோரும் முதன்மை ரோலில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்ட நிலையில் கரீனா, மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று முதலில் செய்தி வெளியான நிலையில் இப்போது ஏப்ரல் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம். படத்தில், கரீனாவின் பார்ட் கொஞ்சம் தான் என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சியை ஏப்ரலில் எடுக்க இயக்குநர் எண்ணியுள்ளாராம்.
0 comments:
Post a Comment