Monday, October 31, 2016

சினிமாக்காரர்களை மட்டும் குறி வைப்பது ஏன்.? - ராஜ் தாக்ரே மீது பரான் அக்தர் பாய்ச்சல்


சினிமாக்காரர்களை மட்டும் குறி வைப்பது ஏன்.? - ராஜ் தாக்ரே மீது பரான் அக்தர் பாய்ச்சல்



31 அக்,2016 - 12:08 IST






எழுத்தின் அளவு:








பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் பாலிவுட் படங்களில் பரவலாக நடித்து வருகிறார். ஆனால் யூரி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்திருந்த ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படம் ரிலீஸாவதில் சிக்கல் இருந்து வந்தது. குறிப்பாக எம்என்எஸ்., கட்சியின் தலைவர் ராஜ்தாக்ரே ‛ஏய் தில் ஹே முஷ்கில்'படத்தை திரையிட விடமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கினார்.

இறுதியில் பாக்., நடிகரை நடிக்க வைத்தற்காக ராணுவ நலத்திட்டத்திற்கு ரூ.5 கோடி நிதி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டவுடன் படம் திரைக்கு வந்தது. மேலும் இனி பாகிஸ்தானை கலைஞர்களை இந்திய படங்களில் நடிக்க வைத்தால் ராணுவத்திற்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பரான் அக்தரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுப்பற்றி அவர் கூறியுள்ளதாவது... ‛‛நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக நிதி அளிப்பதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் நான் கேட்க விரும்புவது எல்லாம், ஏன் எப்போதுமே சினிமாக்காரர்களை மட்டும் குறி வைக்கிறீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நீங்கள், எங்கள் சார்பாக நீங்கள் தான் கேள்வி கேட்க முடியும். அதேசமயம் ஒரு சட்டம் கொண்டு வருகிறீர்கள் என்றால் அதை எல்லோருக்கும் பொதுவானதாக கொண்டு வர வேண்டும். சினிமாக்காரர்களை மட்டும் குறிவைத்து சட்டம் இயற்ற கூடாது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஆண்டுக்கு சுமார் 2 பில்லியன் டாலர் வணிகபரிவர்த்தனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. நீங்கள் அதை நிறுத்த முடியுமா...?, அவை எல்லாவற்றையும் நிறுத்துங்கள், சினிமாக்காரர்களை மட்டும் சுலபமாக குறிவைத்து தாக்குகிறீர்கள் என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

பரான் அக்தர் இவ்வளவு ஆதங்கமாக பேச ஒரு காரணம் உள்ளது. ஏனென்றால் ஷாரூக்கான் நடித்து வரும் ‛ரயீஸ்' படத்தின் தயாரிப்பாளர்களில் பரான் அக்தரும் ஒருவர், இதில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை மகிரா கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment