ஏ.ஆர்.ரகுமான் இசையை தேடி அலைந்த ரெயில்வே அதிகாரிகள்
29 அக்,2016 - 16:06 IST
ரெயில்வே அதிகாரிகள் ஏ.ஆர்.ரகுமானின் இசையை தேடி அலைந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மத்திய அமைச்சர் உமாபாரதி ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு டில்லி திரும்புவதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ரெயில் நிலையத்தில் அறிவிப்புகளுக்கு இடையில் இசையை ஒலிக்க விடுவார்கள். அதில் ஒரு இசை உமாபாரதிக்கு பிடித்து விட்டது. ரெயில் ஏறுவதற்கு முன் அதிகாரிகளிடம் "நீங்கள் ஒளிபரப்பிய இசை நன்றாக இருந்தது அதை பதிவு எனக்கு அனுப்பி வையுங்கள்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
அதிகாரிகளுக்கு அவர் எந்த இசையை கேட்டார் என்பது தெரியவில்லை. இதனால் ரெயில் நிலையத்திலிருந்த கர்நாடக இசையோடு தொடர்புடைய சில இசையை அவருக்க அனுப்பி வைத்துள்ளனர். உடனே அவர் "இது நான் கேட்ட இசை அல்ல" என்று கூறியுள்ளார். உடனே ரெயில் நிலைய சேமிப்பில் இருந்த அத்தனை இசையிலிருந்து சிறு சிறு பகுதிகளை பதிவு செய்து அனுப்பி வைத்திருந்தனர். அவற்றில் ஒரு இசையை தேர்வு செய்த அமைச்சர் இதுதான் நான் கேட்ட இசை தகவல் சொல்லியிருக்கிறார். அது ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஆல்பத்தில் இருந்த இசை. அதன் பிறகே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
0 comments:
Post a Comment