Saturday, October 29, 2016

இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்


இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்



29 அக்,2016 - 13:32 IST






எழுத்தின் அளவு:








தீபாவளி திருநாள் இந்தியா முழுக்க மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள இந்தியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் கல்யாணம் ஆன பின்னர் வரும் தீபாவளி, அந்த தம்பதியரின் தலை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இதில் திரை பிரபலங்களும் அடக்கம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் திரை நட்சத்திரங்கள் அதிகம், அவர்கள் யார் யார் என்று இனி பார்ப்போம்...

* ‛அரவான்' படத்தில் நடித்த அர்ச்சனா கவி, மலையாள நடிகர் அபிஸ் மேத்யூவை திருமணம் செய்து கொண்டார்.

* ‛இனிது இனிது' படத்தில் நடித்த சரண்குமார், நேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

* நமக்கு பல தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சங்கவி, பெங்களூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை காதல் கலப்பு திருமணம் செய்துகொண்டார்.

* ‛கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன், காரைக்குடியை சேர்ந்த உமாவை திருமணம் செய்து கொண்டார்.

* தமிழ் நடிகை கஜாலா, மும்பை போட்டோகிராபர் பைசல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

* நடிகை தேவயானியின் தம்பி நடிகர் நகுல், சென்னை தனியார் நிறுவன ஊழியர் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

* கயல் ஹீரோ சந்திரன், டிவி புகழ் அஞ்சனாவை திருமணம் செய்து கொண்டனர்.

* ‛லண்டன்', ‛தகதிமிதா' படங்களில் நடித்த நடிகை அங்கிதா, விஷால் ஜெகதாப் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

* ‛உறுமீன்' படத்தில் ஜோடியாக நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் நிஜ வாழ்விலும் ஜோடி சேர்ந்தனர்.

* நடிகர் பாண்டியராஜன் மகன் ப்ரித்விராஜ் - ஆஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

* ‛பட்டாளம்' படத்தில் நடித்த பாலாஜிக்கு பிரீத்தி என்பவருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

* வானம் படத்தின் இயக்குனர் கிரிஷ், டாக்டர் ரம்யாவை ரம்யாவை திருமணம் செய்துகொண்டார்.

* இயக்குனர் விக்ரம் கே குமார், ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் சவுண்ட் எஞ்சினியர் ஸ்ரீநிதி திருமணம் இந்த ஆண்டு நடைபெற்றது.

* ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன், டிவி புகழ் ஹேமா சின்ஹா, திருமனம் சமீபத்தில் நடைபெற்றது.

* நடிகையும் டான்சருமான சுஜிபாலா, பிரனேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

* ‛பிச்சைக்காரன்' படத்தில் நடித்த நடிகை சாட்னா, பட விநியோகஸ்தர் கார்த்தி என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்

* ‛கல்லூரி' படத்தில் நடித்த அகில், சுகாசினி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஆண்டு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரது திருமணமும் நடந்துள்ளது. அனைவருக்கும் தினமலரின் இனிய தலை தீபாவளி வாழ்த்துக்கள்!


0 comments:

Post a Comment