‛கத்தி சண்டை'-யை வாங்கிய கேமியோ பிலிம்ஸ்
27 அக்,2016 - 17:12 IST
திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கேமியோ பிலிம்ஸ் - சி ஜெ ஜெயக்குமார், தற்போது அவரின் அடுத்த தயாரிப்பில் உருவாகி வரும் இமைக்கா நொடிகள் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில், அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா, இந்தி திரையுலகின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் என இதுவரை எவரும் கண்டிராத, பிரம்மாண்டமான நட்சத்திர கூட்டணியில் உருவாகி வரும் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இப்பொழுது முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சி.ஜெ.ஜெயக்குமார், தற்போது விஷால் - தமன்னா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கத்தி சண்டை படத்தின் தமிழ் விநியோக உரிமையை வாங்கி இருக்கிறார்.
இதுகுறித்து கேமியோ பிலிம்ஸ், சிஜெ.ஜெயக்குமார் கூறியிருப்பதாவது... ‛‛சிறந்த நட்சத்திர கூட்டணி, வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள், தரமான, அதே சமயத்தில் ரசிகர்கள் ஆர்வத்தோடு ரசிக்கக்கூடிய கதைக்களம், ஆகிய மூன்றும் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் செயல்படுகின்றது. அந்த வகையில், விஷால்-தமன்னா, தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூரி மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகியோருடன் கத்தி சண்டை படம் மூலம் கைக்கோர்த்து இருப்பது, எங்கள் கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது.
முழுக்க முழுக்க அதிரடி கலந்த பொழுது போக்கு திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் கத்தி சண்டை நிச்சயமாக ரசிகர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் முழுமையாக பூர்த்தி செய்யும். பல வருடங்கள் கழித்து வடிவேலு சார் நடிக்கும் இந்த கத்தி சண்டை படத்தில் நாங்கள் இணைந்திருப்பது, எங்கள் கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த மிக பெரிய பெருமை. அதுமட்டுமின்றி, முதல் முறையாக மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு. நந்தகோபால் அவர்களோடு கைக்கோர்த்து இருப்பது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாங்கள் கத்தி சண்டை படத்தை வருகின்ற நவம்பர் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். நிச்சயமாக எங்களின் கத்தி சண்டை திரைப்படம் ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்" என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment