மீண்டும் கிளம்பிய சர்ச்சை – சமுத்திரகனி காவல்துறையில் புகார்
Published 1 min ago by CF Team Time last modified: October 26, 2016 at 8:07 am [IST]
கோலிவுட்டின் பிரபல நடிகர் சமுத்திரக்கனி பல படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றவர்.
advertisement
பல தேசிய விருதுகளை வாங்கிய இவர் தற்போது சினிமாவில் மிகவும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இவர் மீது சமூக வலைத்தளங்களில் போலியாக சிலநபர்கள் கணக்கு தொடங்கி சர்ச்சையான தகவல்களை இவர் பெயரில் பரப்பி வருகிறார்கள்.
சினிமா டிக்கெட் விலை 120 ரூபாயிலிருந்து 325 க்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர் குறைந்தது 275 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கலாம் என்றும் சமுத்திரக்கனி சொன்னதுபோல பதிவிட்டுள்ளனர்.
இதை பின்பற்றி நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள். சமூக வலைத்தளத்தில் கணக்குகள் எதுவும் இல்லாத நிலையில் விஷமிகள் தன்னை சிக்கலில் மாட்டிவிடுவதாக தற்போது சென்னை காவல் துறையில் அவர் புகார் கொடுத்துள்ளார்.
Summary in English : Samuthrakani filed complaint against fake profiles by his name that spreading rumors about ticket price in social medias.
0 comments:
Post a Comment