Saturday, October 29, 2016

மும்பையில் 100 கோடியில் பங்களா கட்டுகிறார் பிரியங்கா சோப்ரா


மும்பையில் 100 கோடியில் பங்களா கட்டுகிறார் பிரியங்கா சோப்ரா



29 அக்,2016 - 16:08 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை. தமிழில் விஜய் ஜோடியா தமிழன் படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் விதி அவரை இந்திக்கு இழுத்துச் சென்று... அங்கிருந்து ஹாலிவுட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டது. உலகின் சக்தி வாய்ந்த 100 பேர் பட்டியலிலும் இடம் பெற்று விட்டார்.

பிரியங்காவுக்கு மும்பையிலும், அமெரிக்காவிலும் சொந்த வீடு உள்ளது. என்றாலும் தற்போது அவர் மும்பை அந்தேரி பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார். மினி பிரிவியூ தியேட்டர், டப்பிங் தியேட்டர், நீச்சல் குளம், மீட்டிங் ஹால், ஹெலிகாப்டர் தளம் ஆகிய வசதிகளுடன் கூடிய பிரமாண்ட பங்களாவாக அதனை வடிவமைத்துள்ளார். இதற்காக முன்னணி கட்டுமான நிறுவனத்துடன் 100 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியிருக்கிறது. இது பிரியங்கா சோப்ராவின் கனவு இல்லமாம்.


0 comments:

Post a Comment