Sunday, October 30, 2016

பாபிசிம்ஹாவுக்கு கீர்த்தி சுரேஷ் செய்த உதவி!


பாபிசிம்ஹாவுக்கு கீர்த்தி சுரேஷ் செய்த உதவி!



31 அக்,2016 - 09:09 IST






எழுத்தின் அளவு:








ஜிகர்தண்டாவுக்கு பிறகு பாபி சிம்ஹாவும், இது என்ன மாயம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேசும் இணைந்து நடித்த படம் பாம்பு சட்டை. பல மாதங்களுக்கு முன்பே திரைக்கு வருவதாக இருந்த இந்த படம் சில பிரச்சினைகளில் சிக்கியிருந்ததால் குறித்தபடி வெளியாகவில்லை. ஆனால் இப்போது படம் ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது. நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாதம் படம் திரைக்கு வரயிருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த படம் குறித்து கேட்டபோது, பாம்பு சட்டை படத்தில் கீழ்மட்டத்தில் இருந்து வரும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக என்னென்ன போராட்டங்களை சந்திக்கிறார் என்பதை மையப்படுத்தும் கதையில் உருவாகியிருகிறது. ஆனால் அப்போது அவருக்கு பல இடையூறுகள் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவருக்கு கைகொடுத்து உதவி செய்யும் ஒரு முக்கியமான வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ஒரு எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் ஏழைப்பெண் ணாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில், இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் பாம்பு சட்டையில் நடித்துள்ளார். காதல் காட்சிகள் மட்டுமின்றி பாபி சிம்ஹாவுக்கு உதவி செய்யும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.


0 comments:

Post a Comment