தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழில் அறிமுகமாகும்போதே ஒப்புக் கொண்டு நடித்த படம் பாம்பு சட்டை.
இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும் படத்தின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
அதற்கு காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள பாபி சிம்ஹாவின் நிர்வாண காட்சிதானாம்.
இப்படத்திற்கு யு சர்ட்டிபிகேட் கிடைத்தாலும், படத்தில் அக்காட்சி உள்ளிட்ட சில காட்சிகளை வெட்டச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் படத்தின் முக்கியமான காட்சியை வெட்டினால் கதை பாதிக்கப்படும் என்பதால் படக்குழு தீவிர யோசனையில் இருக்கிறதாம்.
ஆடம்தாசன் இயக்கியுள்ள இப்படத்தை மனோபாலா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Keerthy suresh’s movie Paambhu Sattai into trouble
0 comments:
Post a Comment