தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அதிகாரபூர்வ அறிவிப்பு
27 டிச,2016 - 10:24 IST
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நமது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கதிற்கு 2017-2019ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 05.02.17 அன்று நடக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம் ஜனவரி 4ந் தேதி முதல் 7ந் தேதி வரை காலை 10மணியிலிருந்து மாலை 5 மணி வரை சங்கத்தில் வழங்கப்படும். 8ந் தேதி முதல் 12ந் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்ககளை அதற்கான பாக்சில் போடலாம்.
13ந் தேதி மாலை 4 மணிவரை விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 18ந் தேதி மாலை 6 மணிக்கு வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். பிப்ரவரி 5ந் தேதி காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குபதிவு நடக்கும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் ஒரு லட்சம் ரூபாயும், மற்ற நிர்வாக பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் 50 ஆயிரம் ரூபாயும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் 10 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment