Wednesday, December 28, 2016

9 வருடத்திற்குப் பிறகு தெலுங்கில் நடிக்கும் குஷ்பு


9 வருடத்திற்குப் பிறகு தெலுங்கில் நடிக்கும் குஷ்பு



28 டிச,2016 - 15:49 IST






எழுத்தின் அளவு:








தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் குஷ்பு. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார். தமிழில் கடைசியாக 'பெரியார்' படத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் அவர் நடிக்கவில்லை. சிறப்புத் தோற்றத்தில் மட்டுமே சில படங்களில் நடித்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் 'ஓ அந்த நாட்கள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் 5 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்ததைப் போல தற்போது தெலுங்கில் 9 வருடங்களுக்குப் பிறகு நடிக்க உள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ள படத்தில் குஷ்பு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இது பற்றிய அறிவிப்பை குஷ்புவே வெளியிட்டுள்ளார்.

“த்ரிவிக்ரம் மிக அற்புதமான கதையை உருவாக்கியிருக்கிறார். மிகமிக பலமான கதாபாத்திரம். சிரஞ்சிவீயுடன் நடித்தது தான் என்னுடைய கடைசி தெலுங்குப் படம். இப்போது அவருடைய தம்பியுடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படங்களில் மீண்டும் நடிக்கலாம் என முடிவெடுக்க என நீண்ட காலமானது. தெலுங்கில் நடிக்க 9 வருடங்களும், தமிழில் நடிக்க 7 வருடங்களும் ஆனது. எனது கதாபாத்திரங்களில் நன்றாக நடிப்பேன். எனது ரசிகர்களை ஏமாற்றமாட்டேன் என நினைக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment