அம்முடு பாடலுக்கு நோ சொன்ன ஜூனியர் என்.டி.ஆர்
25 டிச,2016 - 16:29 IST
மெகா ஸ்டார் சிரஞ்சீவி காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள கைதி நம்பர் 150 படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த வாரம் வெளிவந்த அம்முடு பாடல் யூடியூபில் ஐந்து மில்லியன் வியூவ்ஸை கடந்துள்ள நிலையில் , கிறிஸ்துமஸை முன்னிட்டு நேற்று வெளிவந்த சுந்தரி எனும் பாடலுடன் ஒரு மில்லியன் வியூவ்ஸை கடந்துள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்துள்ள இவ்விரு பாடல்களில் அம்முடு பாடலை, ஜூனியர் என்.டி.ஆரின் ஜனதா கேரேஜ் படத்தில் குத்தாட்ட பாடலுக்கு பயன்படுத்த ஜூனியர் என்.டி.ஆருக்கு தேவி ஸ்ரீ பிரசாத் போட்டுக் காட்டியுள்ளார். ஆனால் அம்முடு பாடலுக்கு ஜூனியர் என்.டி.ஆர் நோ சொல்லவே அது சிரஞ்சீவி படத்தில் இடம் பெற்றுள்ளது. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் ராம் சரண் தயாரிக்கும் கைதி நம்பர் 150 திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 2017 ஜனவரி 12ல் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment