பத்மாவதி படப்பிடிப்பில் ஒருவர் பலி
26 டிச,2016 - 14:17 IST
‛பத்மாவதி' படப்பிடிப்பில் பெயின்டர் ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி, பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சரித்திர படத்தை கையிலெடுத்துள்ளார். பத்மாவதி என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பெயின்ட் அடிக்கும் வேலைகள் நடந்தது. இதில், 34 வயது மதிக்கத்தக்க முகேஷ் என்பவர் சற்று உயரத்தில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து முகேஷ் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலன் இன்றி முகேஷ் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பத்மாவதி படப்பிடிப்பில் ஒருவர் பலியான சம்பவம் ரன்வீர், தீபிகா, சஞ்சய் உள்ளிட்ட படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
0 comments:
Post a Comment