பவன் கல்யாண் படத்தில் பிரபல தமிழ் பட இயக்குனர்
31 டிச,2016 - 17:30 IST
தமிழில் முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி போன்ற பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரன், முதன்முறையாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தெறி திரைப்படம் தெலுங்கில் போலீஸோடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. அப்படத்திற்கு பின்னர் தெலுங்கு படமொன்றில் மகேந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
அஜித் நடிப்பில் தமிழில் சூப்பர்ஹிட் அடித்த வீரம் படம், தெலுங்கில் இயக்குனர் டாலி இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் ‛கட்டமராய்டு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தில் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கட்டமராய்டு படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் கட்டமராய்டு படத்திற்கு இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ் இசையமைக்கின்றார். புத்தாண்டை முன்னிட்டு வெளிவந்துள்ள இப்படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் பரவிவருகின்றன.
0 comments:
Post a Comment