Sunday, December 25, 2016

புத்தாண்டில் சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்


புத்தாண்டில் சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்



25 டிச,2016 - 16:25 IST






எழுத்தின் அளவு:








நாகசைதன்யா - சமந்தாவின் திருமண நிச்சயதார்த்தம் 2017 ஜனவரி 29ல் நடைபெறவிருப்பதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த மனைவி லக்ஷ்மி வழி மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் சமந்தாவும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். சமந்தாவும் நாகசைதன்யாவும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள தயாரான நிலையில், நாகசைதன்யா - அமலா தம்பதியரின் மகன் அகிலின் காதல் விவகாரம் வெளிவந்தது. நாக சைதன்யாவின் திருமணத்தை ஒத்தி வைத்துவிட்டு அகிலின் திருமணத்தில் ஆர்வம் காட்டும் நாகார்ஜூனா குடும்பதினர், அகிலின் திருமண நிச்சயதார்த்தை கடந்த மாதம் நடத்தி முடித்தனர். ஸ்ரேயா பூபல் - அகிலின் திருமணம் 2017 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் நாகசைதன்யா - சமந்தாவின் திருமண நிச்சயதார்த்தம் 2017 ஜனவரி 29ல் நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


0 comments:

Post a Comment