Wednesday, December 28, 2016

விமலா ராமனை கடவுளாக்கிய ரசிகர்கள்...!


விமலா ராமனை கடவுளாக்கிய ரசிகர்கள்...!



28 டிச,2016 - 17:19 IST






எழுத்தின் அளவு:








குஷ்புவுக்கு கோவில் கட்டியவர்கள், அடுத்ததாக நக்மாவிற்கு கோயில் கட்ட கடப்பாறையை தூக்கியவர்கள், நயன்தாராவுக்கு கோவில் கட்ட கல் எடுத்தவர்கள் என பிரபல நடிகைகளின் ரசிகர்களில் சிலர் தத்து பித்துவென ஏதாவது செய்துகொண்டு இருப்பது வாடிக்கை தான்.. ஆனால் எந்தவகையிலும் பாப்புலராக இல்லாத நடிகை விமலாராமனை அம்மானாக சித்திரித்து, விமலாயிசம் என்கிற ஹேஸ்டேக்கையும் உருவாக்கியுள்ளார்கள்.. இனி நீங்கள் தான் கடவுள் என்கிற ரேஞ்சுக்கு அதில் ஆராதனையும் செய்து வருகிறார்கள்.. இதற்கு நன்றி என விமலா ராமனும் ட்வீட்டில் பதிலளித்துள்ளார்.. ஆமாம் யார் இந்த விமலாராமன் என கேட்பவரா நீங்கள்..? கீழே படியுங்கள்...

தமிழில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் விமலா ராமன். அதன்பின் 'ராமன் தேடிய சீதை' படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்தாலும், ஏனோ தமிழ்சினிமா அவரை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட, மலையாள திரையுலகம் தான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. அதுகூட 2008 வரை தான், அதன்பின் கடந்த 7 வருடங்களாக தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் மட்டுமே நடித்துவந்த விமலா ராமன் இப்போது மீண்டும் மலையாள சினிமாவில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக 'ஒப்பம்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.


0 comments:

Post a Comment