ஆடியோ பிசினஸ் தொடங்கும் தயாரிப்பாளர்
26 டிச,2016 - 15:50 IST
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தங்க மீன்கள் உட்பட ஆகிய படங்களை வெளியிட்ட விநியோகநிறுவனம் 'ஸ்டுடியோ-9'. பின்னர் விஜய்சேதுபதியை வைத்து சந்தனத்தேவன் என்ற படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால் அந்தப்டம் ட்ராப்பாகி, பிறகு பஞ்சாயத்து நடைபெற்று விஜய்சேதுபதியை வைத்து தர்மதுரை படத்தை தயாரித்தது.
இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாகவும் நடித்தார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகரான ஆர்.கே.சுரேஷ் தனது 'ஸ்டுடியோ-9 மியூசிக்' என்ற நிறுவனம் மூலம் இப்போது ஆடியோ உலகிலும் கால் பதிக்கிறார்.
இந்த நிறுவனத்தின் முதல்வெளியீடாக புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'அட்டு' என்ற படத்தின் ஆடியோ வெளிவர உள்ளது. ரத்தின லிங்கா இயக்கத்தில் வட சென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லும் அட்டு படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ள 'ஸ்டுடியோ-9 மியூசிக் நிறுவனம்' மிக விரைவில் வெளியிடவிருக்கிறது.
ஆடியோ மார்க்கெட் களையிழந்து காணப்படும் இந்த நேரத்தில் 'ஸ்டுடியோ-9 மியூசிக்' நிறுவனத்தை ஆர்.கே.சுரேஷ் தொடங்குகிறார் என்றால் நிச்சயமாக அவருக்கு ஒரு கணக்கு இருக்கும். அவருடைய கணக்கு வொர்க்அவுட்டாகிறதா பார்ப்போம்.
0 comments:
Post a Comment