கோடிட்ட இடங்களை நிரப்புக மீண்டும் தள்ளிவைப்பு: பொங்கல் ரிலீஸ்
28 டிச,2016 - 10:42 IST
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமய்யா நடித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார். அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை பார்த்திபன் க்ரவுட் பண்டிங் முறையில் தயாரிக்க தொடங்கி அது வெற்றி பெறாமல் போகவே நண்பர்களின் துணையுடன் சொந்தமாக தயாரித்துள்ளார். படத்தை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த பார்த்திபனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
யார் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் படத்தை டிசம்பர் 23ந் தேதி வெளியிடுவேன் என்று அறிவித்திருந்தார். அறிவித்தபடி அவரால் வெளியிட முடியாதபடி பொருளாதார நெருக்கடி. இதனால் டிசம்பர் 30ந் தேதி வெளியிடுவதாக அறிவித்தார். இப்போது இன்னும் தள்ளிவைத்து பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
"பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படம் வெளிவரக்கூடாது. காரணம் பெரிய நடிகர்களின் படம் வருவதே ரசிகனுக்கு பண்டிகை காலம்தான். எனவே பண்டிகை காலத்தை சிறிய படங்களுக்கு தரவேண்டும்" என்று பார்த்திபன் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால் அவரே தன் படத்தை பெரிய படங்களுடன் வெளியிடும் சூழல் உருவாகியுள்ளது.
0 comments:
Post a Comment