சினிமா உலகைப்பொறுத்தவரை ஒரு படம் ஹிட்டடித்து விட்டால், அந்த படத்தில் இணைந்த கலைஞர்கள் அதன்பிறகும் படங்களில் தொடர்ந்து பணியாற்றுவது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் திரிஷா இல்லன்னா நயன்தாராவில் ஜி.வி.பிரகாசுடன் நடித்த கயல் ஆனந்தி அதன்பிறகும் அவருடன் நடித்து வருகிறார். அதேபோல், டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணியும் மீண்டும் அவர் படங்களில் நடித்து வருகிறார். இதனால் கிசுகிசுக்களிலும் சிக்கிக்கொண்டுள்ளார் ஜி.வி.,
இதுபற்றி அவர் கூறுகையில், தொடர்ந்து எனது படங்களில் ஆனந்தி, நிக்கி கல்ராணி நடித்து வருவதற்கு எந்த வகையிலும் நான் காரணமல்ல என்று பல்டி அடித்துள்ளார். என்னை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களின் முடிவுதான் அது. அவர்கள் என்னுடன் நடித்த படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களே அதை முடிவு செய்கிறார்கள். விளைவு, நான் அவர்களுக்கு சிபாரிசு செய்வதாகவும் செய்திகள் வருகிறது. ஆனால் அதில் துளியும் உண்மையில்லை.
மேலும், ஒரே மாதிரியான பாணி கதைகளில் நடிக்கவும் நான் விரும்பவில்லை. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.அந்த வகையில், தற்போது நான் நடித்து வெளியாக உள்ள படங்கள் என்னை மாறுபட்ட நடிகனாக வெளிப்படுத்தும் என்று கூறும் ஜி.வி.பிரகாஷ், தொடர்ந்து நடிப்பு-இசை என இரட்டை குதிரை சவாரி செய்யப்போவதாகவும் சொல்கிறார்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment