மறைந்த இயக்குனருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த குஞ்சாக்கோ போபன்..!
27 டிச,2016 - 17:30 IST
மலையாள இயக்குனர் குஞ்சாக்கோ போபனுக்கு நான்கைந்து வருடங்களுக்கு முன் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. கதாநாயகனாக நடித்த படங்கள் பெரும்பாலும் ஓடவில்லை. என்ன செய்யலாம் என்கிற குழப்பமான சூழலில் இருந்தபோதுதான் அவரை அணுகினார் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை. தன்னிடம் 'ட்ராபிக்' என்கிற கதை இருப்பதாகவும் அதில் கொஞ்சம் வில்லத்தனம் கலந்த டாக்டர் வேடம் இருப்பதாகவும் அதில் நடிக்க முடியுமா எனவும் குஞ்சாக்கோவிடம் கேட்டார். வில்லனாக நடிப்பதா என ஆரம்பத்தில் யோசித்தாலும் அதற்கு ஒப்புக்கொண்டு நடித்தார். அந்தப்படம் ஹிட்டாகி குஞ்சாக்கோவின் இன்னொரு முகத்தை ரசிகர்களுக்கு காட்டியது..
அப்போது முதல் மீண்டும் குஞ்சாக்கோவின் மார்கெட் சூடு பிடித்தது. சில வருடங்கள் கழித்து, அதாவது கடந்த வருடம் தான் இயக்கும் 'வேட்ட' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் மீண்டும் குஞ்சாக்கோவை நடிக்க வைத்தார் ராஜேஷ் பிள்ளை. அந்த அளவுக்கு குஞ்சாக்கோ போபனுடன் நெருங்கிய நட்பை வளர்த்து வந்தார் ராஜேஷ். ஆனால் 'வேட்ட' படம் வெளியான தினத்தன்றே துரதிர்ஷ்டவசமாக மரணத்தையும் தழுவினார் ராஜேஷ் பிள்ளை.
அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் விதமாக ராஜெஷ்பில்லையிடம் எடிட்டராக பணியாற்றிய மகேஷ் நாராயணன் என்பவர் தற்போது டேக் ஆப் என்கிற படத்தை இயக்கிவருகிறார். அதாவது இந்தப்படத்தின் தயாரிப்பில் ராஜேஷ் பிள்ளையின் சொந்த தயாரிப்பு நிறுவனமும் ஒரு பார்ட்னர். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் குஞ்சாக்கோ போபன், இதற்கு ஒரு படி மேலாக, இதுநாள் வரை இந்தப்படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்கமாலேயே நடித்து வருகிறார்.. படத்தை முடித்து வெளியிட்டு அதில் லாபம் வந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என பெருந்தன்மையாக கூறிவிட்டாராம்.
0 comments:
Post a Comment