Saturday, December 31, 2016

காவிரி விவகாரத்தில் வரிந்து கட்டிய நடிகை தமிழுக்கு வந்தார்


காவிரி விவகாரத்தில் வரிந்து கட்டிய நடிகை தமிழுக்கு வந்தார்



31 டிச,2016 - 15:50 IST






எழுத்தின் அளவு:








சோக்குசுந்தரம் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை செளஜன்யா. அதன்பிறகு கன்னட படங்களில் நடிக்க சென்று விட்ட அவர், பின்னர் ஒரு தமிழ்ப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் காவிரி பிரச்சினை விஸ்வரூபமெடுத்திருந்தது. அப்போது சில கன்னட நடிகைகளுடன் சேர்ந்து கொண்டு செளஜன்யாவும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் எனறு ஆவேசமாக குரல் கொடுத்தார். அது சில இணைய தளங்களிலும் வெளியானது.

அதனால், இந்த நேரத்தில் செளஜன்யாவை தமிழ்ப்படத்தில் நடிக்க வைத்தால் பிரச்சினையாகி விடும் என்று அவரை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டு பக்கமே வராமல் இருந்து வந்த செளஜன்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சென்னை வந்தவர், சில டைரக்டர்களை சந்தித்து படவேட்டை நடத்தியிருக்கிறார். அதோடு, அப்போது ஏதோ வேகத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று பேசி விட்டேன். அதை நினைத்து இப்போது வருந்துகிறேன் என்று கிளிசரின் போடாமலேயே கண்கலங்கி வாய்ப்பு கேட்டுள்ளார் செளஜன்யா. என்றாலும், இன்னும் எந்த கோலிவுட் பட கம்பெனிகளின் கதவுகளும் இந்த கன்னட நடிகைக்காக திறக்கப்படவில்லை.


0 comments:

Post a Comment