ஒரு படம் இரண்டு வாரங்கள் ஓடுவதே குதிரை கொம்பாக இருக்கும் காலம் இது.
200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்து, ஒரு மாதம் ஓட்டி, போஸ்டர் அடிப்பதை பெருமையாக நினைக்கின்றனர்.
இந்நிலையில், இவ்வருடத்தின் சூப்பர் ஹிட்டான கபாலி படம், சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாட்களையும், மதுரை மணி இம்பாலா தியேட்டரில் 150 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளது.
இதனையடுத்து, விஜய் நடித்த தெறி மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் ஆகிய படங்கள் நூறு நாட்கள் ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment