Thursday, December 29, 2016

காளி வெங்கட்டை கண்ணீர் விட வைத்த டைரக்டர்!


காளி வெங்கட்டை கண்ணீர் விட வைத்த டைரக்டர்!



29 டிச,2016 - 09:34 IST






எழுத்தின் அளவு:








மதயானைக்கூட்டம், பண்ணையாரும் பத்மினியும், வாயை மூடி பேசவும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று, ராஜா மந்திரி என பல படங்களில் நடித்தவர் காளி வெங்கட். இதில், விஷ்ணுவுடன் அவர் நடித்த முண்டாசுப்பட்டி படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதையடுத்து, மாதவன் நடித்த இறுதிச்சுற்று. இந்த படத்தில் கதாநாயகி ரித்திகா சிங்கிற்கு அப்பா வேடத்தில் நடித்திருந்தார் காளி வெங்கட். அதன்பிறகு கலையரசனுடன் ராஜா மந்திரி என்ற இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.

இந்நிலையில், தற்போது ஜெய் நடித்துள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் மூன்று நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார். பிரண்டு வேடம் என்றபோதும் அழுத்தமான கதாபாத்திரமாம். அதனால் இந்த படம் முண்டாசுப்பட்டிக்குப்பிறகு எனக்கு அடுத்த திருப்புமுனையாக தரப்போகிற படம் என்கிறார் காளி வெங்கட். மேலும், ஹீரோவின் காதலுக்காக நண்பர்கள் சந்திக்கும் பிரச்சினையை செம காமெடியாக சொல்லியிருக்கிறார் டைரக்டர். அந்த வகையில். இந்த படத்தின் கதையை கேட்டபோதே நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அந்த சிரிப்பில் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. அதனால் இந்த படம் பார்க்க வரும் ரசிகர்களும் வயிறு வலிக்க வலிக்க சிரிக்கப்போகிறார்கள் என்பது மட்டும் உறுதி என்கிறார் காளி வெங்கட்.



0 comments:

Post a Comment