பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பல படங்களில் நடித்து இன்று சூப்பர் ஸ்டார் ஆனார். ஆனால் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க நீண்ட நாள் ஆசை இருக்கிறது.
ஆனால் இன்னும் அது நிறைவேறவில்லை. இது பற்றி அவர் சென்னை வரும்போதெல்லாம் பேட்டியில் சொல்லியிருக்கிறார். தற்போது எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த கள்வனின் காதலி படத்தை இயக்கியவர் இயக்குனர் தமிழ்வாணன்.
இவர் இப்போது புதிய கதையை தயார் செய்து அதை மொழி மாற்றம் செய்து அமிதாப்புக்கு அனுப்பியுள்ளாராம். இப்படத்திற்கு சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன் படத்தின் பெயரை அனுமதி பெற்று வைத்துள்ளார்களாம்.
இதில் எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக நடிக்க அமிதாப் பச்சன் முக்கிய ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவாஜி கணேசன் அமிதாப்புக்கு நல்ல நண்பர் என்பதால் கண்டிப்பாக இப்படத்திற்கு ஓகே சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதில் நயன்தாரா நடிக்க வாய்ப்புகள் அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment