கேள்வி ஞானத்தால் படம் இயக்கும் புதுமுகம்
29 டிச,2016 - 14:08 IST
முன்பெல்லாம் சினிமா இயக்குனர் ஆகவேண்டு என்றால் ஒரு பெரிய இயக்குனரிடம் குருகுலம் மாதிரி சேர்ந்து தொழில்கற்று பிறகு படம் இயக்க வேண்டும். அதற்கு பிறகு திரைப்படக் கல்லூரியில் தொழில்நுட்பம் பயின்று படம் இயக்கினார்கள். இப்போது அப்படி இல்லை. படம் பார்த்த அனுபவம், கேள்விப்பட்ட அனுபவம், புத்தகத்தில் படித்ததை கொண்டு படம் இயக்குகிறார்கள்.
அப்படி தனது கேள்வி ஞானத்தைக் கொண்டு மு.ரா.சத்யா என்பவர் என்னோடு நீ இருந்தால் என்ற படத்தை இயக்குகிறார். சைட்டோ பிலிம் கார்பரேசன் சார்பில் எஸ்.யசோதா தயாரிக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் சத்யாதான் ஹீரோ, மானசா நாயர் என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர ரோகினி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். நாக.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார், கே.கே இசை அமைக்கிறார். படத்தை பற்றி இயக்குனரும், ஹீரோவுமான சத்யா கூறியதாவது:
நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. படம் பார்த்து பார்த்து கற்றுக் கொண்டதும், கேள்வி ஞானம், மற்றும் சினிமா பற்றி நிறைய படித்ததையும் வைத்து இயக்குனராகி இருக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன் ஆன்மீகம், போதை ஒழிப்பு , தன்னம்பிக்கை பற்றிய புத்தகங்களை எழுதி இருக்கிறேன். என்னோடு நீ இருந்தால் ரொமான்டிக் திரில்லர் கதைக்களம்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நாயகன் கிஷோர் கோடீஸ்வர பெண்ணான பூஜாவை காதலிக்கிறான். திடீர்ரென்று ஒரு நாள் பூஜா காணமல் போகிறாள். கிஷோர் அவளை தேடி அலைகிறான். இதற்கிடையே அவனைச்சுற்றி பல்வேறு திகைப்பூட்டும் திகில் நிறைந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களை விறு விருப்போடு, மென்மையான காதலை கலந்து சொல்லுகிறது படம். படத்தில் வெறும் காதலை மட்டும் கூறாமல், இன்றைய கால கட்டத்தில் சமூகத்திற்கு தேவையான பெரிய விழிப்புணர்வையும் கொடுக்க உள்ளோம். படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க சென்னையிலேயே நடத்தியிருக்கிறோம். என்றார் மு.ரா.சத்யா.
0 comments:
Post a Comment