காமெடி வேடத்தில் இருந்து ஹீரோ வேடத்துக்கு தாவிய பின், காமெடி கேரக்டர்களை தவிர்த்து வந்தார் சந்தானம்.
தற்போது சர்வர் சுந்தரம், மன்னவன் வந்தானடி, சக்கப் போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெய் பிரணித்தா நடித்துவரும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் கெஸ்ட் ரோலில் காமெடி செய்யவிருக்கிறாராம் சந்தானம்.
மகேந்திரன் ராஜாமணி இயக்கியுள்ள இப்படத்தில் காளிவெங்கட், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படம் பைரவா உடன் 2017 பொங்கலுக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் ஜெய் உடன் சந்தானம் இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment