மகள் இறந்த துக்கம் தாங்காமல் மரணம் அடைந்த ஹாலிவுட் நடிகை
31 டிச,2016 - 15:15 IST
ஸ்டார் வார்ஸ் படங்கள் மூலம் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கேர்ரி பிஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவருக்கு வயது 62. அவரது தாயார் டெப்பி ரெனால்ட்ஸ். இவரும் நடிகைதான். 1950 களில் பிரபலமாக இருந்தார். சிங்கிங் இன் தி ரெய்ன், டேம்பி அண்ட் தி பேட்லர்ஸ் உள்ளிட்ட சுமார் 60 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.
84 வயதாகும் டெப்பி ரெனால்ட் முதுமை காரணமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். தாயும் மகளும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மகள் கேர்ரி பிஷர் இறந்ததை தாய் டெப்பி ரெனால்ட்ஸால் தாங்க முடிவில்லை. கேர்ரி பிரஷின் இறுதி சடங்குகள் முடிந்து வீட்டுக்கு வந்தவர் உடல் நலம் குன்றினார். மகளை நினைத்து அழுது கொண்டே இருந்த டெப்பிக்கு நேற்று திடீனெ வலிப்பு ஏற்பட்டது. உடடியாக அவரை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இறந்தார் டெப்பி ரொனால்ட். ஒரே வாரத்திற்குள் அம்மா, மகள் என இரண்டு நடிகைகள் அடுத்தடுத்து இறந்தது ஹாலிவுட் சினிமா வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment