Friday, December 30, 2016

தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு 2016-ம் ஆண்டு எப்படி...? - ஒரு அலசல்


தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு 2016-ம் ஆண்டு எப்படி...? - ஒரு அலசல்



31 டிச,2016 - 10:36 IST






எழுத்தின் அளவு:








என்னதான் கதை ஹீரோ என்று சொன்னாலும், ஹீரோக்கள் இல்லாத படங்களே இருக்க முடியாது. அப்படி வெளிவரும் படங்களும் ஒருசில தான், எப்போதாவது அத்திபூத்தாற் போல் தான் நடக்கும். எம்ஜிஆர்., சிவாஜி காலத்தில் ஏன் ரஜினி-கமல் காலக்கட்டங்களில் கூட ஹீரோக்கள் வருடத்திற்கு சர்வசாதரணமாக 10-15 படங்கள் வரை நடித்தார்கள், இன்னும் சொல்லப்போனால் அதையும் தாண்டி என்று கூட சொல்லலாம், ஆனால் இப்போது உள்ள ஹீரோக்கள் அப்படியில்லை ஒருபடம் நடித்தாலும் தரமாக படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று, இரண்டு மட்டும் தான் நடிக்கிறார்கள். ஆனால் அதுவும் சரியாக போகாதது வருத்தமான விஷயம். சரி இவ்வளவு கதையும் எதுக்கு என்கிறீர்களா...?, 2016ம் ஆண்டில் நம் தமிழ் சினிமா ஹீரோக்கள் எத்தனை படங்களில் நடித்தார்கள், யார் ஜொலித்தார்கள், புதுமுகங்களுக்கு எப்படி வரவேற்பு இருந்தது என்பதை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்...

நெருப்புடா ரஜினி : இந்த வருடம் ரஜினி, கபாலி என்ற ஒரே படத்தில் அனைவரையும் ஓவர்டேக் செய்துவிட்டார். தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டுமொரு முறை கபாலி மூலம் நிரூபித்துவிட்டார்.

தெறிக்கவிட்ட விஜய் : ரஜினியை போன்று விஜய்யும் இந்தாண்டு தெறி என்ற ஒரு படத்தில் தான் நடித்தார். அதுவும் ரசிகர்களை தெறிக்கவிட்டதோடு தான் என்றும் வசூல் மன்னன் என்று நிரூபித்துவிட்டார்.

விஜய்சேதுபதி : இந்த வருடத்தில் அதிக படங்களில், அதுவும் வெற்றி படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி தான். சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என்று அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து விட்டார்.

சசிகுமார் : சேதுபதியை அடுத்து சசிகுமார் இந்த வருடம் தாரை தப்பட்டை, கிடாரி, வெற்றிவேல், பலே வெள்ளையதேவா போன்ற படங்களில் நடித்து அடுத்த இடத்தில் இருக்கிறார்.


ஜிவி பிரகாஷ் குமார் : நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு என மூன்று படங்களில் நடித்திருக்கிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் ஜிவி படம் என்றாலே வேறு மாதிரி இருக்கிறது என்று வருத்தப்பட வைக்கிறது. இனி வரும் காலங்களில் நல்ல கதையில் ஜிவி., தேர்ந்தெடுத்து நடித்தால் நல்லது. வரும் ஆண்டில் ராஜீவ் மேனன் போன்றவர்களின் இயக்கத்தில் நடிக்கிறார், அதனால் அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்று நம்பலாம்.

அட்டகத்தி தினேஷ் : ஜிவி.,யை போலவே தினேஷூம் இந்த வருடம் மூன்று படங்களில் நடித்துள்ளார். அதில் இரண்டு படங்கள் ஹீரோ, மற்றொன்று சூப்பர் ஸ்டார் ரஜினி படம். இவர் நடித்த விசாரணை படம் தேசிய விருது வாங்கியது, மற்றொரு படமான ஒரு நாள் கூத்து விமர்சனம் ரீதியாக பாராட்டப்பட்டது. கபாலி, ரஜினியுடன் நடிக்க வைத்து பேச வைத்தது. இவரிடம் என்ன ஒரு குறை என்றால் அதிகம் யாரிடமும் மீடியாக்கள் கூட பேசாதது தான், வரும் வருடம் மாற்றி கொள்ளுங்கள் தினேஷ்.

விஜய் ஆண்டனி : விஜய் ஆண்டனியின் கதை தேர்வு நன்றாக உள்ளது, யார் கண்பட்டதோ, மனிதர் ஒரே மாதிரி நடிக்கிறார். இந்த வருடம் வெளி வந்த பிச்சைக்காரன் படம் சக்கை போடு போட்டது. சைத்தான் படம் பல விமர்சனங்களை கண்டது. வரும் வருடம் எமன் கதையில் இவர் முழித்து கொள்வார் என எதிர் பார்க்கலாம்.

சிம்பு : இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என்ற இரண்டு படங்களில் சிம்பு இந்த வருடம் நடித்தார். மனிதரை படப்பிடிப்புக்கு வர வைப்பது தான் கஷ்டம். செட்டுக்கு வந்திட்டார் என்றால் முடிக்காமல் போக மாட்டார். இது அவரே பல முறை நம்மிடம் சொன்னது. வரும் வருடம் சந்தானம் படத்தில் இசை அமைப்பாளரகவும் களமிறங்க உள்ளார். இன்னும் பல நல்ல விஷயங்களை சிம்புவிடம் இந்த வருடம் எதிர்பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் : ரஜினி முருகன், ரெமோ என்று ரெண்டு படங்களில் இந்த வருடம் நடித்து இருந்தார் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரது படங்களை ரசிப்பது இவருக்கான பலம். இந்தாண்டு இவர் நடித்து வெளியான இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. அதேசமயம் விழா மேடைகளில் இவர் அடிக்கடி அழுவது பலவீனம்.

தனுஷ் : தனுஷ் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடல்தான். விமர்சனங்கள் எது வந்தாலும் தூர வைத்து விட்டு தனக்கான வேலையை பார்த்து கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் தயாரிப்பு, மற்றொருபுறம் நடிப்பு என்று பிஸியாக வலம் வருகிறார். இந்த வருடம் தொடரி, கொடி போன்ற படங்களில் நடித்தார். வரும் வருடம் எனை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களுடன் தன் இயக்குநர் அவதாரமான ‛பவர் பாண்டி' படமும் வெளிவர இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் : உதயநிதிக்கு அரசியல் பின்புலம் ஒரு பக்கம் பிளஸ் என்றால் அதுவே மற்றொரு பக்கம் மைனஸாக இருக்கிறது. முன்பை விட இப்பொது கதை தேர்வில் சொதப்பாமல் இருக்கிறார். இந்த வருடம் கெத்து, மனிதன் போன்ற படங்களில் நடித்தார். அவர் தயாரிப்பு பணிகளில் அவ்வளவாக முனைப்பு காட்டவில்லை, ஏன் என்றால் சில பிரச்சனைகளின் அனுபவம் தான் அதற்கு காரணம். வரும் காலங்களில் எல்லாம் மாறும் என நம்பலாம்.

விஷால் : விஷாலுக்கு மருது, கத்தி சண்டை போன்ற படங்கள் இந்த வருடம் வெளி வந்தது. நடிகர் சங்கம், தயாரிப்பு பணிகளுடன் நடிகர் சங்க பிரச்னை என ஆண்டு முழுக்க பிஸிதான். என்ன இனியும் அடி உதை, வெட்டு குத்து என்று படங்களில் கத்தி சண்டை போட்டால் மட்டும் போதாது விஷால், கொஞ்சம் ஸ்ட்ராங் கதை வேணும், இல்லையென்றால் உடம்பு வலிக்க சண்டை போட்டாலும் வேளைக்கு ஆகாது.

சூர்யாவுக்கு 24 படம் ஏமாற்றம் தந்தது. ஜீவா நடிப்பில் இந்தாண்டு 3 படங்கள் வந்தது, மூன்றுமே அவரை கவலையடைய செய்துவிட்டது.

கார்த்திக்கு தோழா, காஷ்மோரா என்ற இரண்டு படங்கள் வந்தன. இரண்டும் அவரை ஸ்டெடியாக நிற்க வைத்துள்ளது. விக்ரம் நடிப்பில் இந்தாண்டு இருமுகன் மட்டும் தான் வந்தது. விக்ரம்-நயன்தாரா முதன்முறையான கூட்டணி என்ற எதிர்பார்ப்பிலேயே அனைவருக்கும் லாபகரமான படமாக அமைந்தது.

இந்த வருடத்தில் முக்கியமாக சொல்ல வேண்டியது அழகை தாண்டி இயல்பான நடிகர்களுக்கு மக்கள் அதரவு இருந்தது என்றால் காமெடி ரோல்களில் அசத்திய மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு இவர்கள் தான். இவர்கள் இருவரும் இல்லாத படங்களே என்று சொல்லும் அளவுக்கு படங்கள் இருந்ததோடு, இருவரும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர்.


0 comments:

Post a Comment