Thursday, December 29, 2016

நேற்று சமுத்திரக்கனி; இன்று கமல்ஹாசன்… கவனிப்பது யாரோ?

Kamalhassan


பிரபலம் என்றாலே அவர்களுக்கு பிராப்ளம்தான் போல.


சில விஷமிகள் பிரபலங்களின் பெயரில், போலியான அக்கவுண்ட்களை உருவாக்கி ஏதாவது ஒன்றை சொல்லி அவர்களை வம்பில் மாட்டி விடுவார்கள்.


சில நாட்களுக்கு முன்பு, சமுத்திரக்கனி தன்னுடைய பெயரில் ஒரு போலி அக்கௌண்ட் உள்ளது என காவல் துறையில் புகார் செய்தார்.


தற்போது கமல்ஹாசன் பெயரில் ஒரு போலி அக்கவுண்ட் மூலம் சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


இதை கமல் சொல்லிருப்பார் என்று நினைத்து சிலரும் பகிர்ந்து வருகின்றனர்.


கமல் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment