புத்தாண்டு அன்று தல57 ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு? – ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், அக்ஷரா ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் தல 57 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டும் வகையில் ஒரு சர்ப்ரைஸ் தகவல்.
கடந்த 2015 புத்தாண்டு பிறந்தபோது அஜித் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்று அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், திரிஷா, அனுஷ்கா என பலர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். டிசம்பர் 31 2014 நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது ட்ரைலர்.
இது பற்றி நடிகர் அருண் விஜய் என்னால் மறக்க முடியாதது 2015 நியூ இயர். என்னை அறிந்தால் படத்தின் ட்ரைலர் வெளியான சந்தோசத்தில் பலரும் எனக்கு போன், மெசேஜ் செய்து வாழ்த்தினார்கள் என கூறியுள்ளார்.
இதனால் இந்த வருடமும் அதே போல அஜித் நடிக்கும் தல 57 படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment