Wednesday, December 28, 2016

இந்த படத்திற்கு தல அஜித்-தான் பொருத்தமா இருப்பார் – நீத்து சந்திரா அதிரடி கருத்து


தமிழில் ‘தங்கல்’ ரீமேக்கில் நடிக்க அஜித்தால் முடியும் என்று நடிகை நீத்து சந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.


நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தங்கல்’. ஆமிர்கான் தயாரித்துள்ள இப்படத்தை டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவில் இப்படம் பெரும் வசூலை ஈட்டி வருகிறது.


தமிழகத்தில் ‘கத்தி சண்டை’ மற்றும் ‘பலே வெள்ளையத்தேவா’ ஆகிய படங்களை விட பெரும் வசூல் செய்து வருகிறது. பல இடங்களில் இவ்விரண்டு படங்களை எடுத்துவிட்டு ‘தங்கல்’ திரையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


நடிகை நீத்து சந்திரா அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம்.


இந்த நிலையில், “’தங்கல்’ தமிழ் ரீமேக்கில் தகுதியானவர் யார்?” என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “கண்டிப்பாக அஜித் சார் தான். அவர் ஒரு விளையாட்டு வீரர். விளையாட்டு வீரரால் என்ன கதாபாத்திரம் வேண்டுமானாலும் செய்ய முடியும். அவருக்கு சவால் விடவேண்டாம்” என்று பதிலளித்துள்ளார் நீத்து சந்திரா.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்


















0 comments:

Post a Comment