சென்னை: ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் அஜீத்தின் பெயர் இல்லை.
போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்திலும், ஷாருக்கான் இரண்டாவது இடத்திலும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
நடிகர் அக்ஷய் குமார் 4வது இடத்திலும், கேப்டன் டோணி 5வது இடத்திலும் உள்ளனர்.இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் போர்ப்ஸ் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார். அவர் ரஜினிகாந்த்(30வது இடம்) மற்றும் உலக நாயகன் கமல் ஹாஸனை(49வது இடம்) முந்தியுள்ளார்.
போர்ப்ஸ் பட்டியலில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு 33வது இடத்தில் உள்ளார். ஸ்ருதி ஹாஸன் தனது தந்தை கமல் ஹாஸனை முந்திக் கொண்டு 46வது இடத்தை பிடித்துள்ளார்.போர்ப்ஸ் பட்டியலில் தனுஷ்(47வது இடம்) விஜய்யை(61வது இடம்) முந்தியுள்ளார்.
சூர்யாவுக்கு 51வது இடம் கிடைத்துள்ளது. சீயான் விக்ரமுக்கு 72வது இடம் கிடைத்துள்ளது.போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் இந்த ஆண்டு படம் வெளியாகததால் நடிகர் அஜித்குமாரின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர், நடிகர், டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா 90வது இடத்தில் உள்ளார்.
இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்
0 comments:
Post a Comment