Wednesday, December 28, 2016

பிருத்விராஜ் - 2016 ; ஒரு பார்வை


பிருத்விராஜ் - 2016 ; ஒரு பார்வை



28 டிச,2016 - 12:51 IST






எழுத்தின் அளவு:








மலையாள சினிமாவை பொறுத்தவரை கடந்த வருடம் முழுவதுமே பிருத்விராஜின் ஆண்டாகத்தான் இருந்தது என சொல்லலாம். ஆரம்ப மாதங்களில் நிவின்பாலி படங்களின் தொடர் வெற்றிகளால் அவருக்கு ஏறுமுகம் இருப்பதுபோல தோன்றினாலும் ஜுனிற்கு பிறகு குறிப்பாக ஆகஸ்ட்டிலிருந்து வெளியான பிருத்விராஜின் மூன்று படங்களும் தொடர்ச்சியாக மாஸ் ஹிட்டாகி அவரை வசூல் மன்னனாக மாற்றின..

அந்த வெற்றிகளிப்புடன் இந்த வருட ஆரம்பத்தில் பிருத்விராஜ் நடித்த 'பாவாட' படம் வெளியானது.. மொடாக்குடிகாரனாக இருக்கும் பிருத்விராஜ், அதலிருந்து மீண்டு, தனது தாயை தேடி கண்டுபிடிப்பதும், தாய்க்கு நேர இருந்த அவமானத்தில் இருந்து அவரை மீட்பதும் தான் கதை.. இந்தப்படமும் நூறு நாட்களை கடந்து சூப்பர்ஹிட்டாக ஓடியது..

அதனை தொடர்ந்து அடுத்ததாக வெளியான ஜேம்ஸ் ஆண்ட ஆலிஸ் படத்தில் பிருத்விராஜ் குடும்ப தலைவனாக நடித்திருந்தார். இருந்தாலும் இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் ஜீத்து ஜோசப்-பிருத்விராஜ் கூட்டணியில் 'ஊழம்' என்கிற ரிவெஞ்ச் திரில்லர் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. அதில் பழிவாங்குவதற்கு கையாளப்பட்ட தீம் நன்றாக இருந்ததாக சிலர் பாராட்டினாலும் கிட்டத்தட்ட நிறைய இடங்களில் லாஜிக் குறைபாட்டால் அந்தப்படமும் வெற்றியை கோட்டை விட்டது.

இந்த வருட இறுதியில், அதாவது கிறிஸ்துமஸ் ரிலீசாக பிருத்விராஜ் நடித்த எஸ்ரா' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் கேரளாவில் புதிய திரைப்படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் அதிபர்கள் விதித்த நிபந்தனைகளால் இந்தபடம் ரிலீசாகவில்லை.. ஆக மூன்று படங்களில் ஒன்று வெற்றி, இரண்டு மீடியம் வகை தோல்வி என்கிற விகிதத்தில் பிருத்விராஜிற்கு இந்த வருடமும் லாபமும் நட்டமும் சரிவிகிதத்தில் தான் இருந்தது.


0 comments:

Post a Comment