Tuesday, December 27, 2016

ஆதித்யா - கத்ரீனா டேட்டிங் போகவில்லை


ஆதித்யா - கத்ரீனா டேட்டிங் போகவில்லை



27 டிச,2016 - 14:57 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டின் முன்னணி நடிகையாக கத்ரீனா கைப், நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் வயப்பட்டிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. இதையடுத்து கத்ரீனா, நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் நெருங்கி பழகுவதாகவும், இருவரும் டேட்டிங் எல்லாம் போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதை கத்ரீனாவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛கத்ரீனாவும், ஆதித்யாவும் நல்ல நண்பர்கள், தேவையற்ற வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். இதுபோன்ற அர்த்தமற்ற, உண்மையற்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி கேட்டு கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment