பாக்ஸ் ஆபிசில் தோல்வியடைந்த ஆ கயா ஹீரோ
26 மார்,2017 - 15:29 IST
நடிகர் கோவிந்தா நடித்த ஆ கயா ஹீரோ படம் கடந்த வாரம் ரிலீசானது. படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகியும் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட மிக குறைந்த அளவிலேயே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வார இறுதி நாட்களில் ரூ.75 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஆ கயா ஹீரோ படம் வசூலித்த மொத்த தொகை ரூ.1.05 கோடி. இது மற்ற படங்களுடன் ஒப்பிடுகையிலும், எதிர்பார்த்ததை விடவும் மிக குறைந்த தொகையாகும். இதனால் பாக்ஸ் ஆபிசில் இப்படம் தோல்வி அடைந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லை என்பதும் இப்படத்தின் தோல்விற்கு காரணமாக பாக்ஸ் ஆபிசில் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment