Tuesday, March 28, 2017

காதல் கலந்த த்ரில்லர் படத்தில் அபிஷேக் பச்சன்


காதல் கலந்த த்ரில்லர் படத்தில் அபிஷேக் பச்சன்



28 மார்,2017 - 14:30 IST






எழுத்தின் அளவு:








70 வயதை கடந்த போதிலும் நடிகர் அமிதாப் பச்சன் ஆண்டுக்கு பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வலம் வருகிறார். ஆனால் அவரது மகனான அபிஷேக் பச்சனோ, போதிய பட வாய்ப்புகள் இன்றி இருக்கிறார். கடைசியாக ஹவுஸ்புல்-3 படத்தில் நடித்தார். இந்நிலையில் பிரபுதேவா இயக்கும் ‛லெப்டி' என்ற படத்தில் அபிஷேக் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

போர்ஸ், திரிஷ்யம்(ஹிந்தி), மாதாரி போன்ற பல படங்களை இயக்கிய நிஷிகாந்த், இப்போது காதல் கலந்த ஒரு த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இதில் அக்ஷ்ய் தான் ஹீரோ. இன்னும் படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் கைதா தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்தாண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


0 comments:

Post a Comment