Monday, March 27, 2017

யோகா நிபுணரான அமலாபால்


யோகா நிபுணரான அமலாபால்



27 மார்,2017 - 10:45 IST






எழுத்தின் அளவு:








இயக்குனர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு அமலா பால் முன்பை விட சுறுசுறுப்பாகிவிட்டார். வடசென்னை, திருட்டு பயலே இரண்டாம் பாகம், பாஸ்கர் தி ராஸ்கல் தமிழ், சதுரங்க வேட்டை வினோத் படம், மலையாளத்தில் குயின் ரீமேக் என பிசியாக இருக்கிறார். இதற்கிடையில் தனது உடம்பை பிட்டாக வைத்துக்கொள்ள கடுமையான உடற்பயிற்சி மற்றும் யோகசானங்களையும் செய்து வருகிறார்.

கேரளாவில் உள்ள பிரபல மாஸ்டரிடம் யோகா கற்று வந்த அமலாபால் அதில் இரண்டாம் பருவத்தை முடித்திருக்கிறார். இப்போது அவர் மற்றவர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கலாம். மூன்றாவது கட்டத்தை முடித்து விட்டால் யோகா மாஸ்டர் ஆகிவிடலாம். யோகா மையத்தில் தான் செய்த யோகா ஆசனங்களை படமாக தனது சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார் அமலா பால். "மனதையும், உடம்பையும் ஆரோக்கியமா வைத்திருப்பது யோகா மட்டும் தான்" என்கிறார் அமலாபால்.


0 comments:

Post a Comment