‛பூமி' முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த சஞ்சய்
29 மார்,2017 - 16:12 IST
பிரபல ஹிந்தி நடிகர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். சிறை சென்று திரும்பியிருக்கும் இவர், தற்போது இயக்குநர் ஓமங் குமார் இயக்கத்தில் ‛பூமி' படத்தில் நடித்து வருகிறார். அப்பா - மகளுக்கு இடையேயான பாச போராட்டத்தை மையமாக வைத்து ‛பூமி' படம் உருவாகி வருகிறது. இதில் அப்பா ரோலில் சஞ்சய் தத்தும், அவரது மகளாக அதிதி ராவ் ஹைதாரியும் நடிக்கிறார்கள். பூமி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டில்லியின் ஆக்ராவில் நடந்து வந்த நிலையில், அதை விரைவாக முடித்துவிட்டார்கள்.
இதுப்பற்றி தயாரிப்பாளர் பூஷண் குமார் கூறியதாவது.... "படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்தது. அந்த வேகத்திற்கு இணையாக சஞ்சய் தத்தும் சிறப்பாக நடித்தார், இப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது" என்றார்.
0 comments:
Post a Comment