Monday, March 27, 2017

நடிகையை தனுஷ் காதலிப்பது உண்மையா..?

actor dhanushகௌதம் மேனன் இயக்கி தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.


இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


இப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற தகவல் வெளியாகாத நிலையில், இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில் இப்படத்தின் கதை இதுதான் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதில் தனுஷ், கல்லூரி மாணவராகவும், ஒரு நடிகையாக மேகா ஆகாஷ்ம் நடிக்கிறார்கள்.


ஒரு கல்லூரி விழாவுக்கு மேகா ஆகாஷ் வரும்போது, அவரைப் பார்த்த தனுஷ் அவரை காதலிக்க தொடங்குகிறாராம்.


இது நிஜ கதையா? அல்லது வதந்தியா? என்பது படம் வந்தபிறகுதான் தெரியும்.

0 comments:

Post a Comment