மறைந்த இயக்குநர் செய்யாறு ரவிக்கு அஞ்சலி
27 மார்,2017 - 16:01 IST
மறைந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் இயக்குநர் செய்யாறு ரவியின் புகைப்படம் திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் சங்க தலைவர் நாசர், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி, சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் சிவ சீனிவாசன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
நாசர் பேசும் போது, ”மிகவும் சங்கடமான ஒரு சூழல், என்னோடு படித்தவன், என்னைவிட இனியவன், என்னைவிட இளையவன், என்னை விட மிக அறும்பாடு படுபவன். அவனுக்குள் ஒரு போராளி இருக்கிறான். அவனுடைய மறைவு செய்தி என் காதுக்கு கிட்டியபோது சற்றே அதிர்ந்துபோனேன். எல்லோர்க்கும் அவனுடைய காலத்தை அவன் முடித்துக்கொண்டாலும், அவன் வாழ்ந்த காலத்தில் என்ன செய்திருக்கிறார், யார் யார்க்கு உதவி செய்திருக்கிறார், என்று பார்க்கும் போது நூறு ஆண்டு வாழ்க்கையை முடித்துவிட்டு தான் சென்றிருக்கிறார். இப்படிபட்ட ஒரு எந்திரக்காலத்தில் கல்லம் கபடம் அற்ற ஒரு சிரித்த முகத்தை பார்ப்பது மிக மிக அரிதாக இருக்கிறது. அவர் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து போய் இருக்கிறார். ஒரு நூறாண்டு காலம் வாழ்க்கையை ஐம்பது சொட்ச காலத்தில் வாழ்ந்து சென்றிருக்கிறார். அவரது நற்குணத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு நாம் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவரை இழந்த அனைத்து நெஞ்சங்களோடு, எனது நெஞ்சமும் இணைகிறது” என்றார்.
0 comments:
Post a Comment