காஜல்அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்!
26 மார்,2017 - 11:23 IST
விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா படங்களில் ஜோடி சேர்ந்தவர் காஜல்அகர்வால். இந்த படங்களின் வெற்றி காரணமாக தற்போது விஜய்யின் 61வது படத்திலும் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார் காஜல். முன்னதாக, அஜீத்தின் விவேகம் படத்தில் நடித்து முடித்துள்ள அவரிடம் அந்த கதாபாத்திரம் குறித்து கேட்டால், அஜீத்தின் மனைவியாக, குடும்பப் பெண் வேடத்தில் நடிக்கிறேன். அதனால் குடும்பம் சார்ந்த செண்டிமென்ட், ரொமான்ஸ் காட்சிகளில் நான் இருக்கிறேன் என்கிறார்.
விஜய்யின் 61வது படம் குறித்து காஜலிடம் கேட்டால், விஜய் படங்களில் எப்போதுமே எனக்கு வெயிட்டான வேடம் கிடைத்து வருகிறது. அந்த வகையில், இந்த படத்திலும் அவரது காதலிதான் என்றாலும், எனது வேடத்திற்கும் கதையில் முக்கியத்துவம் உள்ளது. ஆரம்பத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் புதுமையாக இருக்கும். அதேபோல் எங்களுக்கிடையே வித்தியாசமான சூழலில் காதலர் மலர்வது போல் காட்சிகள் உள்ளன. இந்த படத்தில் ஏப்ரல் மாதம்தான் நான் நடிக்கிறேன். விஜய்யுடன் நான் நடிக்கும் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. ஆக, ஒரே ஆண்டில் விஜய், அஜீத் என தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் நடிப்பதை, இந்த 2017ம் ஆண்டு ஜாக்பாட் அடித்திருப்பது போன்று உணர்கிறேன் என்கிறார் காஜல்அகர்வால்.
0 comments:
Post a Comment