ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் 90% மலேசியாவிலேயே படமானது.
மேலும் இப்படத்தின் சூட்டிங் அங்கு நடைப்பெற்ற போது, வரலாறு காணாத வகையில் ரஜினிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து படமும் அங்கு மாபெரும் வசூலை அள்ளியது.
இதன் விளைவாக தற்போது, ரஜினியை அங்குள்ள மலாக்கா நகரின் தூதராக்க மலேசிய அரசின் சுற்றுலாதுறை முடிவு செய்துள்ளதாம்.
இது தொடர்பான கடிதத்தை ரஜினிக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு ரஜினி ஒப்புக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது இந்தி நடிகர் ஷாரூக்கான், மலாக்கா நகரின் தூதராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini to replace ShahRukh as Malaysia Malacca tourism ambassador
0 comments:
Post a Comment